நடந்த தவறுகளை நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொண்ட ரணில் தரப்பு!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

மக்கள் விடுதலை முன்னணியினர் குறிப்பிடும் குற்றச்சாட்டுக்களை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றம் இன்று ரணில் விக்ரமசிங்கவுக்கு நம்பிக்கையை தெரிவித்து கொண்டுவரப்பட்ட பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க,

கடந்த ஒன்றரை மாதமாக நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லை. இதனால் மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அபிவிருத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்தச் சிக்கலுக்கு யார் பொறுப்பு கூறுவது? அதனால் தொடர்ந்தும் நாட்டை அராஜக நிலைக்கு கொண்டு செல்ல இடமளிக்க முடியாது. அதனால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருக்கும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கி புதிய அரசாங்கம் ஒன்றை நாங்கள் அமைப்போம்.

கடந்த காலத்தில் எங்களால் விடப்பட்ட தவறுகளை திருத்திக்கொண்டு முன்னுக்கு செல்வோம். மக்கள் விடுதலை முன்னணியினர் குறிப்பிடும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.

Latest Offers