ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் பிரித்தானிய உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

Report Print Theesan in அரசியல்

ஜனநாயக போராளிகள் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிரகத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் பிரத்தியேக சந்திப்பொன்று திருகோணமலையில் இன்றைய தினம் இடம்பெற்றது.

ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் பிரித்தானியா ஆற்றுகின்ற பணிகள் தொடர்பிலும், எதிர்காலத்தில் காணாமல் செய்யப்பட்டோருக்கான பொறுப்புகூறலில் தாங்கள் செய்யவிருக்கின்ற பணிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

புனர்வாழ்வு பெற்ற போராளிகள் தற்போதைய பாதுகாப்பு அவர்களது சமூக அந்தஸ்து வாழ்வாதார நிலை வேலைவாய்புகளை பெற்றுகொள்கின்றபோது சந்திக்கின்ற இடர்பாடுகள் தொடர்பில் எம்மால் எடுத்துரைக்கப்பட்டது.

எதிர்காலத்தில் போராளிகள் தேர்தல்களில் பெற்றுக்கொள்கின்ற அங்கீகாரங்களே மேலும் சர்வதேச இராஜதந்திரிகளும் அவர்சார்ந்த நாடுகளும் போராளிகளுடன் இணைந்து தமிழ் மக்களின் எதிர்கால சமூக பொருளாதார வாழ்வியல் முன்னேற்றங்களில் செயற்படுவதற்கான ஏது நிலைகளை உருவாக்குமென தெரிவிக்கப்பட்டது.

பாராளுமன்ற ஜனநாயகப் அரசியலுக்கு விடுதலைப்புலிகள் அமைப்பு விரைவாக தங்களை தயார்படுத்தி செயற்படுவது நம்பிக்கையினையும் வரவேற்பினையும் சர்வதேச அளவில் ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறிவரும் உலக ஒழுங்குகளுக்கேற்ப தமிழ் மக்களின் கௌரவமான தீர்வு பொருளாதார சமூக முன்னேற்பாட்டு முயற்சிகளில் போராளிகள் தமிழர் அரசியல் பரப்பில் உள்ள அனைவருடனும் பொது உடன்பாடுகளுக்கமைய செயற்பட உள்ளதாகவும்.

இனி ஒருபோதும் இலங்கைத்தீவில் ஒர் ஆயுதப்போர் ஒன்றுக்கான ஏது நிலை தமிழ் மக்களிடமோ போராளிகளிடமோ உறுதியாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers