19ஆம் திகதி பேச்சுவார்த்தை! ஜனாதிபதி விடுத்துள்ள அவசர கோரிக்கை

Report Print Murali Murali in அரசியல்

பெருந்தோட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் வரையில் வேலை நிறுத்தத்தை கைவிட்டு கடமைகளுக்கு திரும்புமாறு பெருந்தோட்ட தொழிலாளர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பிலான பேச்சுவார்த்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்றது.

தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான இன்றைய சந்திப்பின் போது வேலை நிறுத்தத்தை கைட்டு பணிக்கு திரும்புமாறு தொழிலாளர்களிடம் ஜனாதிபதி கோரியதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்க வேண்டுமெனவும், தோட்ட தொழிற்துறையை அபிவிருந்தி செய்யவேண்டும் எனவும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் எதிர்வரும் 19ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Latest Offers