அவசரமாக அலரி மாளிகைக்கு சென்ற சுமந்திரன்!

Report Print Murali Murali in அரசியல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட குழுவினர் இன்று மாலை அலரி மாளிகைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் சுமந்திரன் கலந்துகொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், அலரி மாளிகையில் இடம்பெற்ற சட்டத்தரணிகளுக்கு இடையிலான கலந்துரையாடலில் சுமந்திரன் கலந்துகொண்டிருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இன்று பிற்பகல் ரணிலை பிரதமராக நியமிக்க கோரி நாடாளுமன்றில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை பிரேரணை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதனையடுத்து அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் சுமந்திரன் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.