நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகும் மைத்திரி! இன்று வெளியிடவுள்ள முக்கிய அறிவிப்பு

Report Print Vethu Vethu in அரசியல்

இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கிய தகவலை வெளியிடவுள்ளார்.

தீர்மானமிக்க மற்றுமொரு நீதிமன்றத் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது. இதன் பின்னர் ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்த பிரதமராக நியமிக்கப்பட்டமை, அமைச்சரவை அமைச்சர்களுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

அந்த உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்ட பின்னர் கொழும்பு அரசியல் பல மாற்றங்கள் நிகழவுள்ளன.

மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சர்கள் பிரதமர் மற்றும் அமைச்சர்களாகச் செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றில் மஹிந்த தரப்பு தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உத்தரவு வழங்கப்படும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்குப் பின்னர், ஜனாதிபதி தலைமையில் இன்றிரவு முக்கிய கூட்டம் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவிலேயே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமகாலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இந்தக் கூட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Offers