மஹிந்தவின் அடுத்தகட்ட நிலைப்பாடு என்ன? மைத்திரியிடம் தெரிவிக்கப்பட்ட விடயங்கள்

Report Print Vethu Vethu in அரசியல்

அடுத்து வரும் 24 மணித்தியாலங்களில் சர்ச்சைக்குரிய பிரதமராக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஷ தனது நிலைப்பாட்டினை அறிவிப்பார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் நேற்று இரவு ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கலந்துரையாடலின் பின்னர் கருத்து வெளியிடும் போது முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

தாய் நாட்டிற்காக மேற்கொள்ளப்படும் இந்த போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

மைத்திரி - மஹிந்த இணைந்து நாட்டை ஆட்சி செய்வார்கள் என்றே மக்கள் நினைத்தார்கள். மக்களை கைவிடாமல் மக்களுக்கு அவசியமான ஆட்சி பெற்றுக் கொடுப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபடாது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டு சிந்தித்து செயற்படுமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

அடுத்து வரும் 24 மணித்தியாலங்களில் தனது நிலைப்பாடு தொடர்பில் நாட்டு மக்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பார். அதுவரை அனைவரும் காத்திருங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.