மைத்திரியின் குடியுரிமை பறி போகும் அபாயம்!

Report Print Vethu Vethu in அரசியல்

அரசியலமைப்பை மீறி செயற்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குடியுரிமை பறி போவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய, அரசியலமைப்பை மீறியுள்ளமை உறுதியாகி உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜதி ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தெரிந்தே அரசியலமைப்பினால் மீறினால் அதற்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் அரசியலமைப்பின் 38வது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டத்தின் முன் குற்றவாளியாகியுள்ளார் என அவர் சுட்டிக்காட்டிள்ளார்.

ஆணைக்குழு ஒன்றின் ஊடாக இவ்வாறான ஒருவரின் குடியுரிமையை இரத்து செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.