நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைய அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதா? பிரதமரின் அதிகாரம் யாரிடம்?

Report Print Vethu Vethu in அரசியல்

உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்புக்கு அமைய அமைச்சரவை இரத்துச் செய்யப்பட முடியாது என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பிற்கமைய தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கமைய, இடைநிறுத்தப்பட்டுள்ள அமைச்சரவை இரத்தாகாதென ஜமைக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சட்டத்தரணி பிரதீபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.

நேற்று உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே பேராசிரியர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட வர்த்தமானி தவறு எனவும் நான்கரை வருடங்களுக்கு கலைக்க முடியாதெனவும் மாத்திரமே உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் பிரதமர் யார்? அமைச்சரவை நிலைப்பாடு தொடர்பில் உத்தரவுகள் இல்லை.

19 அரசியலமைப்பின் 42ஆம் சரத்தில், பிரதமரை நியமிக்கும் அதிகாரம் முழுமையாக ஜனாதிபதியிடமே உள்ளது. தற்போது ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மஹிந்தவின் அமைச்சரவைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இறுதியாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவையே இலங்கையின் தற்போதைய பிரதமர் மற்றும் அமைச்சரவையாகும். அதில் பணி செய்ய தடை மாத்திரமே விதிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச பதவி இராஜினாமா செய்தால் மாத்திரமே ரணில் மீண்டும் பிரதமராக முடியும். அதற்கமைய இன்று வெளியாகும் தீர்ப்பு மிகவும் முக்கியமானதாகவும். இனிமேல் உண்மையான போராட்டம் ஆரம்பமாகின்றது என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers