பிரதமராக பதவிப் பிரமாணம் செய்யும் ரணில்

Report Print Vethu Vethu in அரசியல்

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட அமைப்பாளர்கள் இந்தத் தகவலை உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான அமைச்சரவை ஒன்று பெயரிடுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை மைத்திரி - மஹிந்த தரப்பின் செயற்பாட்டில் அதிருப்தி அடைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் புதிய அமைச்சரவை அமைப்பது தொடர்பான தகவலை ஐக்கிய தேசிய கட்சி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைக் கொண்டிருக்கும் தரப்பை, அரசாங்கமாக தொடர்ந்து செயற்பட அனுமதிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers