மஹிந்த, நாமலுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு நெருக்கடி!

Report Print Vethu Vethu in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியின் விதிமுறைகளை மீறி கட்சி மாறியமைக்கு எதிராக கேள்வி விராந்து மனு ஒன்று நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 50 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து அங்கத்துவம் பெற்றுக்கொண்டனர்.

பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராகவும் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியின் உறுப்புரிமை நீக்கும் வகையிலான மனு ஒன்று நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதன்மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மஹிந்த உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் இழப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.