இணையத்தில் புரட்சியை ஏற்படுத்திய ஐக்கிய தேசிய கட்சியினரின் புகைப்படங்கள்!

Report Print Vethu Vethu in அரசியல்

இலங்கை அரசியல் பல்வேறு குழப்ப நிலைகள் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த உறுப்பினர்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நவீன் திஸாநாயவினால் அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் பேஸ்புக் வலைத்தளத்தில் புரட்சி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.

"Present and the future of UNP” என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த புகைப்படத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதித் தலைவரான சஜித் பிரேமதாஸ மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளரான நவீன் திஸாநாயக்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் இடையில் கட்சி தலைமைத்துவத்தில் மோதல் உள்ளதாக தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வெளியாகிக் கொண்டுள்ளது.

எனினும் இணையத்தில் வைரலாகும் புகைப்படங்களுக்கு அமைய, தலைவர்களுக்கு இடையிலான மோதல் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதானிகள் வெளியரங்கில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ள புகைப்படமும் வெளியாகியுள்ளன.