கனேடிய அரசாங்கத்துக்கு விளக்கமளிக்கப்பட்ட இலங்கையின் தற்போதைய நிலவரம்

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் தற்போதைய நிலவரம் தொடர்பில் கனேடிய அரசாங்கத்துக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கனேடிய உயர்ஸ்தானிகர் அசோக கிரஹகம, கனேடிய அரசாங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் யஸ்மின் ரட்ன்சியிடம் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை, நல்லிணக்கம், ஜனநாயகம் உட்பட பல விடயங்கள் பேசப்பட்டுள்ளன.

ஏற்கனவே கனேடிய அரசாங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் யஸ்மின் ரட்ன்சி 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.