முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

Report Print Steephen Steephen in அரசியல்

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தி, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பேராசிரியர் சந்திரகுப்த தெனுவர, பேராசிரியர் ஹேவா வடுகே சிறில், சிரேஷ்ட போராசிரியர் பிரசாந்த குணவர்தன ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

மனுவில் பிரதிவாதியாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குறிப்பிடப்பட்டுள்ளார். தேசிய ஐக்கியம் என்ற அமைப்பு மருதானை பிரதேசத்தில் கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாக மனுதார்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோல், ஒக்டோபர் 18 ஆம் திகதியும் அவர் இப்படியான கருத்தை வெளியிட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதம நீதியரசர் நீதிமன்றத்தில் உள்ள விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுள்ளதாகவும் இதன் மூலம் சரத் என் சில்வா, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளதாகவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதம நீதியரசர் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்தி பொருத்தமான தண்டனை வழங்குமாறும் மனுதாரர்கள், உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Offers