அதிகாரத்துக்கான சண்டையை நிறுத்துமாறு பெபரல் அமைப்பு கோரிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

அதிகாரத்துக்கான சண்டையை நிறுத்தி நடைமுறைப் பிரச்சினையை தீர்க்க புத்திஜீவிகளின் கருத்தாடல்கள் அவசியம் என்று சுயாதீன தேர்தல்களுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பான ”பெபரல்” தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமையானது நீதிக்கு விரோதமானது என்ற தீர்ப்பை நேற்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் தீர்ப்பை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மதித்து செயற்படுவார் என்று தாம் நம்புவதாக பெபரல் தெரிவித்துள்ளது.

அத்துடன் நடைமுறை பிரச்சினை தொடர்பில் புத்திஜீவிகள் கருத்தாடல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் பெபரல் வலியுறுத்தியுள்ளது.