அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்காக சுதந்திர கட்சி உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை

Report Print Ajith Ajith in அரசியல்

அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்காக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தி வருவதாக ஐக்கிய தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

எதிர்கால அரசாங்கத்தில் இணைந்து செயற்படும் நம்பிக்கை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடனேயே பேச்சு நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இரவு இதற்கான முடிவை ஐக்கிய தேசிய முன்னணி எடுத்துள்ளதாகவும் நளின் பண்டார தெரிவித்துள்ளார்