பொதுத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தில் மனு! நாடாளுமன்றத்தில் ஏற்படவுள்ள குழப்பம்

Report Print Steephen Steephen in அரசியல்

பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக இருக்கும் நிலையில் இது எவ்வாறு சாத்தியம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தேர்தல்களை நடத்தவே தேர்தல் ஆணைக்குழு இருக்கின்றது. தேர்தல்களை ஒத்திவைக்க அல்ல. ஆணைக்குழு தேர்தலை நடத்தவே குரல் கொடுக்க வேண்டுமே அன்றி தேர்தலை ஒத்திவைக்க அல்ல.

பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தவர்களின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகளும் அரசசார்பற்ற நிறுவனங்களும் இயங்கியுள்ளன எனவும் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.