முட்டாள் ஆலோசகர்களால் சிக்கலில் மாட்டிக்கொண்ட ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

அரசியலமைப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை எடுத்தன் மூலம் ஜனாதிபதி எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு செல்ல நேரிடும் என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

சத்துரிக்கா, தஹாம் போன்றவர்களை தவிர ஜனாதிபதி சிறிசேனவுடன் தற்போது ஆலோசகர்கள் எவரும் இருக்க மாட்டார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனால், ஜனாதிபதி இனிவரும் காலங்களில் பணியாற்றும் போது இந்த விடயங்களை நினைவில் வைத்துக்கொண்டு செயற்படுமாறு தமது தரப்பினர் தெரிவு செய்த ஜனாதிபதிக்கு நினைவூட்ட விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முஜிபுர் ரஹ்மான் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயற்பட்டுளளதாக உயர் நீதிமன்றத்தில் 7 நீதியரசர்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

இந்த நிலையிலும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயற்படுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியவர்கள் மட்டுமல்லாது, செய்தியாளர் சந்திப்புகளில் அரசியலமைப்புச் சட்டத்தை கையில் வைத்துக்கொண்டு கருத்து வெளியிட்ட கம்மன்பில, வீரவங்ச, எஸ்.பி.திஸாநாயக்க, வாசுதேவ, டிலான் பெரேரா, சுசில் பிரேமஜயந்த, அனுரபிரியதர்ஷன யாப்பா ஆகிய முட்டாள் ஆலோசகர்களின் சட்டரீதியான அறிவு குறித்து பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கறுப்பு அங்கிணை அணிந்து நீதிமன்ற அறைக்கு சென்று ஏனைய சட்டத்தரணிகளிடம் இருந்து விடயங்களை அறிந்துக்கொண்டு நீதிமன்ற படிகளில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் கம்மன்பில, கீழ் நிலை சட்டத்தரணி. அவர் உயர் நீதிமன்ற வழக்குகளில் வாதிடுவதில்லை.

கம்மன்பில போன்ற அரசியல் கோமாளிகளின் கருத்துக்களை ஊடகவியலாளர்களும் தொலைக்காட்சி அலைவரிசைகளும் ஒளிப்பரப்புகின்றன. பத்திரிகைகள் வெளியிடுகின்றன. இப்படியானவர்களின் கருத்துக்களை வெளியிட்டு,மக்களின் அறிவை அவமதிக்க வேண்டாம்.

ஜனாதிபதியை தெரிவு செய்ததது, எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா, வீரவங்ச போன்றவர்கள் அல்ல. நாங்களே ஜனாதிபதியை தெரிவு செய்தோம்.

ஜனாதிபதி பைத்தியகாரத்தமான வேலைகளை செய்யும் போது எமக்கு கவலை ஏற்படுகிறது.

நாட்டின் அதியுயர் பதவியான ஜனாதிபதி பதவியின் கௌரவத்தை பாதுகாக்குமாறு ஜனாதிபதியிடம் கோருகிறேன் என கேட்டுக்கொள்கிறேன் எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.