மஹிந்தவின் பதவி விலகை உறுதிப்படுத்தினார் நாமல்!

Report Print Kamel Kamel in அரசியல்

சர்ச்சைக்குரிய பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகத் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலக உள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாளையதினம் மஹிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்ற உள்ளதாகவும் அதன் பின்னர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பாரிய கூட்டணி ஒன்றை உருவாக்க உள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Latest Offers