மகிந்த தலைமையிலான அமைச்சரவை நாளையுடன் கலையும்!

Report Print Kamel Kamel in அரசியல்

தற்போதுள்ள அமைச்சரவை நாளையுடன் கலையும் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன சற்று முன்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நலனைக் கருத்திற் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியைஇராஜினாமா செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் பிரதமர் பதவி குறித்த உச்ச நீதிமன்றின் விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், அது வரையில் காத்திருந்தால் நாடு பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்யாவிட்டால் வேறும் ஒருவரை பிரதமராக நியமிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படாத நிலையில் நாட்டை நிர்வாகம் செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாளைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றி தனது பதவியை இராஜினாமா செய்வதாக மகிந்த ராஜபக்ச தெரிவிப்பதாகவும், அமைச்சரவையும் இத்துடன் கலையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஜனாதிபதிக்கு வேறும் ஒர் அமைச்சரவையை நியமிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியை அசௌகரியத்திற்கு உட்படுத்த விரும்பாத காரணத்தினால் மகிந்த ராஜபக்ச இவ்வாறு பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Latest Offers