ஐக்கிய தேசியக் கட்சியை இயக்கும் சுமந்திரன்! நிழல் பிரதமராகினார் சம்பந்தன்

Report Print Murali Murali in அரசியல்

விடுதலைப் புலிகளை தோற்கடித்த மகிந்த ராஜபக்சவிற்கு எதிராகவே அனைவரும் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“தற்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பதிலாக சுமந்திரன் தலைமையிலான அணியினர் செயற்படுகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியையும் அவரே இயக்குகின்றார்.

இந்நிலையில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிழல் பிரதமராக செயப்படுகின்றார். இவ்வாறான நபர்களிடம் நாட்டை கையளிப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை.

எவ்வாறாயினும், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் மதிக்கின்றோம். இந்த நாடாளுமன்றத்தை தொடர்ந்தும் கொண்டு செல்ல முடியாது.

ஆகையினால் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும். எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஊடாக மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதனை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறிவருகின்றனர்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers