2009இல் தமிழினம் சந்தித்த முள்ளிவாய்க்கால் பேரழிவை முன்கூட்டியே எதிர்வுகூறிய புலிகளின் பிரபலம்

Report Print Sumi in அரசியல்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 12ஆவது நினைவு தினம் கைவேலியில் அமைந்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜனநாயக போராளிகள் கட்சியினர் விடுத்துள்ள அறிக்கையில்,

தமிழர்களின் தாயக விடுதலைக்கு வலுச்சேர்க்கும் முகமாக தமிழர்கள் படுகின்ற இன்னல்கள் அதற்கான தீர்வு முனைப்புக்களில் தன் வாழ்நாளையே அர்ப்பணித்துக் கொண்டவர் அன்ரன் பாலசிங்கம்.

அங்கீகரிக்கப்படாத நாடொன்றின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரியாகவே உலகினை வலம் வந்தார்.

அவரது அந்திமகாலம் வரை உலகின் செவிகளுக்கு தமிழர்களது இருப்பு, உரிமை, தனித்துவம், பாதுகாப்பு தொடர்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்.

அவை எவையுமே செவிசாய்க்கப்படாமல் 2006. 12. 14 பிரித்தானியாவில் காலமானார்.

அவர் எதிர்வு கூறியது போன்றே தமிழினம் 2009இல் முள்ளிவாய்க்காலில் பெரும் பேரவலத்தை சந்தித்து அழிவடைந்தது.

போர் அவலத்திலிருந்து மீண்டிடும் தமிழ் மக்கள் போராளிகள் இன்று எம் காலத்தில் வாழ்ந்து காலத்தை வென்ற எங்கள் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவரது நினைவுகளை தேசமெங்கும் நினைவில் கொள்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.