தப்பித்துக் கொண்டனர் ரணிலும் சம்பந்தனும்!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

கடந்த காலத்தில் செய்யப்பட்டதை போன்று ஒவ்வொரு முறையும் நீங்கள் தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஷேஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஷேஹான் சேமசிங்க அவரது உத்தோயோகப்பூர்வ இணையதளத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவரின் இணையத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி, சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி ஆகியன தற்காலிகமாக தப்பித்துள்ளன.

ஆனால், நீங்கள் தற்காலிகமாக தேர்தலில் இருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என்பதை நினைவுபடுத்துகிறேன். புதிய அரசுக்கு வாழ்த்துக்கள், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் மக்களின் இறையான்மைக்காக போராடுவார்.

அதுமாத்திரமல்ல, 15 மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் எமது பெரும்பான்மைக்கு கட்டளையிடுவார்கள் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி செயலகத்திற்கு விஜயம் செய்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று (வெள்ளிக்கிழமை) கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யவுள்ளார். அதேவேளை நாளை சனிக்கிழமை மக்களுக்கு விசேட அறிவிப்பை விடுத்ததன் பின்னர் இராஜினாமா செய்யவுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers