ரணிலின் காலத்தில் கூட்டமைப்பிற்குள் பிரிவினைகள்! பெண் அரசியல் பிரமுகர்

Report Print Yathu in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினை பாதுகாப்பதற்கு முழு மூச்சோடு செயற்பட்டது போன்று தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளான அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயங்கள் தொடர்பிலும் செயற்பட வேண்டும் என முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களிலுள்ள மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ரணில் விக்ரமசிங்க தனது காலத்தில் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கிடையில் பிரிவினைகள் ஏற்படுத்தப்பட்டதே அன்றி எவ்வித அபிவிருத்திகளும் அந்த மூன்றரை ஆண்டுகளில் இடம்பெற்றிருக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பலர் வெளியேறும் வகையிலும், அவர்களிற்குள் உடைவுகளை ஏற்படுத்துவதிலுமே அவர் செயற்பட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers