நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் உண்மையான நிறம் தெரிந்துவிட்டது!

Report Print Murali Murali in அரசியல்

அத்தனகல பிரதேச சபை தலைவரின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் லேக் ஹவுஸ் பகுதியில் இடம்பெற்ற கலவரம் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் உண்மையான நிறம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணத்துங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான நீதிமன்றின் தீர்ப்பு வெளியானதும் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் உண்மையான நிறம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் நடந்துகொண்ட வித்தின் மூலம் அதிகாரத்தை எவ்வாறு கைப்பறியிருக்கின்றார்கள் என்பதை கற்பனை செய்து பார்க்க முடியும்.

எவ்வாறாயினும், இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் பொலிஸார் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணத்துங்க மேலும் தெரிவித்துள்ளார்.