திடீரென மஹிந்த பதவி விலகியமைக்கான காரணம் என்ன?

Report Print Vethu Vethu in அரசியல்

பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வது தொடர்பில் மஹிந்த ராஜபக்ச பொது மக்கள் முன்னால் இன்று விசேட உரையாற்றவுள்ளார்.

இன்று காலை 9 மணிக்கு மஹிந்த ராஜபக்ச இந்த விசேட உரையாற்றவுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு நாட்டை காப்பாற்றும் நோக்கில் மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்தார்.

எனினும் நீதிமன்ற தீர்ப்பிற்கமைய தொடர்ந்து தடைவிதிக்கப்பட்ட நிலையில் பதவியில் இருந்தால், அது நாட்டு மக்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

ஏன் என்றால் அமைச்சு பதவிகள் எங்களிடமே உள்ளது. பிரதமர் பதவியும் எங்களிடமே உள்ளது. நீதிமன்றத்தினால் அவை ஒன்றிற்கும் தடை விதிக்கவில்லை. எங்களால் பணியாற்ற முடியாதென்று மாத்திரமே தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை பதவியில் இருந்தால் அடுத்த வருடத்தில் சம்பளம் மற்றும் கொடுப்பனவு வழங்குவதில் பாரிய சிக்கல் நிலைமை ஏற்படும். நாட்டினுள் நெருக்கடி ஏற்படும்.

இதனால் மக்கள் குறித்து சிந்தித்து, ஜனாதிபதிக்கு முன்னால் மஹிந்த ராஜபக்ச மற்றும் நாங்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டோம். இது குறித்து மக்கள் முன்னால் தெளிவாக கூறிய பின்னர் மஹிந்த பதவி விலகுவார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers