இரு வாரங்களில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்!

Report Print Vethu Vethu in அரசியல்

அடுத்து வரும் இரு வாரங்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் அனைத்து தீர்க்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.

இரண்டு வாரத்தில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்து நாடு வழமைக்கு திரும்பும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற நாடாளுமனற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் நீதித்துறை சுயாதீனமாக உள்ளதென உறுதியாகியுள்ளதைாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு நன்மையான நிலைமை ஒன்றை உருவாக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.