தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைக்கும் செயற்பாட்டில் மைத்திரி!

Report Print Vethu Vethu in அரசியல்

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கூட்டமைப்பின் ஆதரவுடனே ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் அமையவுள்ளது. இது தென்னிலங்கை அரசியலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த குழுவொன்றை ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொள்ள ஜனாதிபதி அனுமதி அளித்துள்ளார்.

இதன்மூலம், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் மீதான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதிக்கத்தை முறியடிக்க முடியும் என்றும், கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவு நல்லதல்ல என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சியினரை இணைத்து முக்கிய அமைச்சுப் பதவிகள் சிலவற்றைக் கொடுக்க மைத்திரி திட்டமிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டு வைத்துக் கொள்ளாது என்று ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

எனினும், தனிநபர்களாக, புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்பவர்களை தடுக்கமாட்டேன் என்றும், அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...