புதுமண தம்பதியருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

Report Print Vethu Vethu in அரசியல்

திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதியர் விபத்திற்கு முகங்கொடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 99ஆம் மைல்கல்லுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னதுவ பகுதியில் வைத்து விபத்து இடம்பெற்ற நிலையில், காயமடைந்தவர்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வு இம்பெற்றுள்ளது. மறுவீட்டு அழைப்பாக சென்ற வேளையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தல் போது வாகனத்தை மணமகன் ஓட்டிச் சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.