அவமானப்பட்டு வெளியேறும் மஹிந்த!

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச இன்றைய தினம் பதவி இராஜினாமா செய்யவுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணைகள் இரண்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை மற்றும் நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டமையினால் மஹிந்தவினால் தொடர்ந்தும் பிரதமர் பதவியில் செயற்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் எடின்பரோ சட்ட பீட பேராசிரியர் அசங்க வெலிகலவிடம் கருத்து கேட்ட போது,

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற்ற பிரதமரை பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்பதே எனது நிலைப்பாடாகும்.

எனவே ஜனாதிபதியினால் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்சவை பதவியில் நியமிப்பதற்கு சட்டம் இல்லை.

நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அதிகாரம் இல்லை என கடந்த வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

எனவே வேறு வழியின்றியே மஹிந்த பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய தேவையற்ற வகையில் பிரதமர் பதவியை மஹிந்த பெற்று, தற்போது அவமானப்பட்டுள்ளா் என அவரின் விசுவாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.