பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தில் கையெழுத்திட்டார் மஹிந்த

Report Print Sujitha Sri in அரசியல்

மஹிந்த ராஜபக்ச சற்று முன்னர் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

விஜயராம மாவத்தையிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வமத வழிபாடுகளின் பின்னர் மஹிந்த பதவி விலகுவதற்கான கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

மஹிந்த, பிரதமர் பதவியிலிருந்து விலகுகின்றமை தொடர்பில் நேற்று தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இன்றைய தினம் ராஜினாமா கடிதத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

மேலும், மஹிந்த பிரதமராக பதவி வகிப்பது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்திருந்த இடைக்கால தடையுத்தரவினை உச்ச நீதிமன்றமும் நேற்று நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...