புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து நாட்டை விற்பனை செய்ய முயன்ற ரணில்?

Report Print Steephen Steephen in அரசியல்

குறுகிய காலம் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொண்டதன் ஊடாக 3 விடயங்களை நிறைவேற்றி கொண்டு உள்ளதுடன், ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் இருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இல்லாமல் செய்தது அதில் ஒன்று எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை நேற்று சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

தேசிய வளங்களை விற்பனை செய்தமை உட்பட ஏனைய நடவடிக்கைகளுக்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் இருந்த பலத்தை குறைத்துள்ளோம்.

எதிர்க்கட்சிக்கு சென்று பலத்தை காட்டுவோம். அத்துடன் ஆளும் கட்சியாக இருந்த குறுகிய காலத்தில் மக்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து நிவாரணங்களையும் வழங்கினோம்.

ரணில் விக்ரமசிங்க, புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து நாட்டை விற்பனை செய்ய மேற்கொண்ட வேலைத்திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் காமினி லொக்குகே குறிப்பிட்டுள்ளார்.