மஹிந்தவின் பதவி விலகலில் ஏற்பட்டுள்ள பெரும் சர்ச்சை!

Report Print Vethu Vethu in அரசியல்

மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பில் சர்ச்சை நிலை காணப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் பிரதமர் பதவி வகித்த மஹிந்த, இல்லாத பதவியில் இருந்து எவ்வாறு பதவி விலகுவார் என்பது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையின் உத்தியோகபூர்வ பிரதமர் மஹிந்த என்பதை, நாடாளுமன்றமோ, நீதித்துறையோ ஏற்றுக்கொள்ளவில்லை.

இவ்வாறான நிலையில் அவர் எவ்வாறு இல்லாத பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை உத்தரவு அடுத்த மாதம் வரை நீடிக்கப்பட்ட நிலையில், இன்று தனது பதவியில் இருந்து விலகுவதாக மஹிந்த உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சாகல ரட்நாயக்க தனது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.

Latest Offers