ரணிலுடன் இணையும் மைத்திரியின் சிரேஷ்ட உறுப்பினர்கள்! கட்சி தாவல் தீவிரம்

Report Print Vethu Vethu in அரசியல்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான புதிய அரசாங்கம் நாளை நியமிக்கப்படவுள்ளது.

இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது அமைச்சுப் பதவிகளை வகித்த நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க, லசந்த அலகியவண்ண, விஜித விஜயமுனி சொய்ஸா, சரத் அமுனுகம, துமிந்த திஸாநாயக்க, மஹிந்த அமரவீர, இந்திக்க பண்டாரநாயக்க ஆகியோரே ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையவுள்ளனர்.

நாளைய தினம் பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க பதவியேற்கவுள்ளார். இதன் பின்னர் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்தவர்களுக்கு மீண்டும் அதே அமைச்சுகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Latest Offers