பொலிஸார் போல் நடித்து வர்த்தகர்களை பீதியடையச் செய்த நபர்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

ஹொரணையில் பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வர்த்தகர்களை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு அச்சுறுத்தி கப்பம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாணந்துறை பொலிஸ் பிரிவின் சட்டத்தை அமுலாக்கும் பிரிவினருக்கு நேற்று மாலை கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் தம்வசம் வைத்திருந்த ஒரு கிராம் ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்கள், ஹொரணை வெவல மற்றும் புளத்சிங்கள அதுர ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 35 மற்றும் 50 வயதானவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers