துரித அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்தி, மக்களுக்கு நிவாரணங்களை வழங்க கூடிய அரசாங்கத்தை தம்மால் உருவாக்க முடியும் என ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஒக்டோபர் 26 ஆம் திகதியில் இருந்து நாங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தோம். அந்த போராட்டத்தில் தற்போது நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். எமது காலை பிடித்து இழுத்து, வேலைத்திட்டங்களை சீர்குலைத்த யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்து. கடந்த காலங்களில் பார்க்க ஐக்கிய தேசியக்கட்சியை போல் பாரிய வேலைத்திட்டங்களின் ஊடாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்க எதிர்பார்த்துள்ளோம் என அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.