தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.தே.கட்சியை பணய கைதியாக பிடித்துள்ளது - மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறுபான்மை பலம் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியை பணய கைதியாக பிடித்துள்ளது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தேவையான வகையில் நாட்டை ஆட்சி செய்யாது போனால், எந்த நேரத்தில ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கலாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை தூரத்தில் இருந்து இயக்கும் கருவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று பிரதமர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தில் கையெழுத்திட்ட பின்னர், ஆற்றிய விசேட உரையில் மகிந்த ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்குமாறு கோரி 117 வாக்குகள் வழங்கப்பட்டன. அந்த வாக்குகளில் 14 வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகள். ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்குமாறு கோரி கூட்டமைப்பு வாக்களித்தது.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட உரையை நிகழ்த்திய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்தாலும் அரசாங்கத்தில் இணைய மாட்டோம் எனக் கூறினார்.

தொடர்ந்தும் எதிர்க்கட்சியில் இருக்க போவதாக கூறினார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு 103 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் சிறுபான்மை அரசாங்கத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பணய கைதியாக பித்து்ளளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறும் விதத்தில் நாட்டை ஆட்சி செய்யாது போல், ஐக்கிய தேசியக் கட்சியின் சிறுபான்மை அரசாங்கம், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமே தொலைவில் இருந்து இயக்கும் கருவி உள்ளது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கும் முன்னர் ரணில் விக்ரமசிங்க கடந்த 12 ஆம் திகதி, புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசினார்.புதிய அரசியலமைப்பு வரைவு உருவாக்கப்பட்டு அது ஊடகங்களிலும் வெளியானது.

இந்த அரசியலமைப்புச் சட்டம் ஊடாக நாட்டை 9 அரைகுறை சமஷ்டி மாநில அரசுகளாக பிரிவுக்கவே தயாராகி வருகின்றனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறை ஒழிக்க உள்ளனர்.

அப்படியானால், 2019ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படாது. அதேபோல் புதிய அரசியலமைப்புச் சட்டத்தினால், நாடாளுமன்ற தேர்தல் முறையும் மாறும்.

மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது போன்று எல்லை நிர்ணய பிரச்சினை ஏற்பட்டு, மறுதிகதி அறிவிக்கப்படாமல் 2020 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலையும் ஒத்திவைக்க முடியும். அதற்கே இவர்கள் தயாராகி வருகின்றனர் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...