மகிந்தவோடு இருந்தவர்கள் நாளை ரணிலோடு! பேச்சுக்கள் தீவிரம்

Report Print Steephen Steephen in அரசியல்

மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட ஐக்கிய தேசியக்கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கட்சியுடன் இணைய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜயதாச ராஜபக்ச, எஸ்.பி.நாவின்ன, துனேஷ் கங்கந்த ஆகியோர் மீண்டும் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைவது தொடர்பில், ஐக்கிய தேசிய முன்னணி முக்கிஸ்தர் ஒருவர் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக கூறப்படுகிறது.

விஜயதாச ராஜபக்ச தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காவிட்டாலும் ஹோமாகமை அல்லது மகரகமை தொகுதியின் அமைப்பாளர் பதவியை பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய முன்னணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் இருக்க இந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமல்லாது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என இவர்களை இணைக்கும் தரகு பணியில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கூறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை மீண்டும் ஐக்கிய தேசிய முன்னணியில் இணையவுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள எஸ்.பி. நாவின்ன, கட்சி மாறுவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

பொதுத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால், அதுவரை மக்களுக்கு சேவை செய்ய எண்ணியுள்ளதாகவும் அதற்கு அமைய நடவடிக்கை எடுப்பதாகவும் நாவின்ன குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...