இணையத்தில் வைரலாகும் மஹிந்தவின் காணொளி!

Report Print Vethu Vethu in அரசியல்

சர்ச்சைக்குரிய முறையில் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இன்று காலை விஜேராமவில் உள்ள அவரது இல்லத்தில் இராஜினாமா கடிதத்தில் அவர் கையொப்பமிட்டிருந்தார்.

மஹிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டுள்ள நிலையில், அவர் இராஜினாமா செய்து கொள்வதாக அறிவித்தார். அதன் பின்னர் தனது இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டார்.

அவர் கையொப்பமிடும் போது சிரித்த முகத்துடன் கையொப்பமிட்டுள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பொதுத் தேர்தலை நடத்தும் நோக்கில் இரண்டு மாத காலப்பகுதிக்கு பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டதாக மஹிந்த இன்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers