மைத்திரியின் உண்மையான குணாதிசயம் இது தான்! ரணிலை ஏற்றார்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு சிறிசேன இணங்கியுள்ளார் என்றும் இது தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் உண்மையான குணாதிசயம் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிதலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின்னர், ரணில் பிரதமராக நாளை சத்தியப் பிரமாணம் செய்து கொள்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருக்கிறது. ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு சிறிசேன இணங்கியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதில்லை என முன்னர் உறுதியாக தெரிவித்திருந்த போதிலும் தற்போது ரணிலை நியமிப்பதற்கு அவர் இணங்கியுள்ளமை குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. இது ஜனாதிபதியின் உண்மையான குணாதிசயத்தை வெளிப்படுத்தியுள்ளது.

தேசிய அரசாங்கத்தை விரும்பாத சிலர் ஜனாதிபதியை தவறாக வழிநடத்தினர். இதன் காரணமாகவே அவர் பிரதமரை நீக்கினார். எனினும் தற்போது உண்மை தெரியவந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்பினை அடுத்து பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச இன்றைய தினம் இராஜினாமா செய்து கொண்டார். இதேவேளை நாளை பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.