ஜனநாயகத்தை பற்றி பேசும் உரிமை ரணிலுக்கு கிடையாது! ரில்வின் சில்வா

Report Print Steephen Steephen in அரசியல்

உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஐக்கிய தேசியக்கட்சியின் வெற்றியோ, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று வழங்கிய தீர்ப்பல்ல என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடையில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

பொருளாதாரத்தை அழித்து நாட்டின் வளங்களை வெளிநாட்டவருக்கு விற்பனை செய்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஜனநாயகத்தை பற்றி பேச எந்த உரிமையும் கிடையாது.

குறிப்பாக தனது கட்சியின் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாத தலைவரான ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனநாயகம் பற்றி பேச எந்த உரிமையும் இல்லை எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers