மூடிய அறைக்குள் ஒரு மணிநேரம் இரசியமாக பேசிய ரணில் - மைத்திரி!

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோருக்கு இடையில் நீண்ட நேர பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சபாநாயகர் கருஜயசூரிய வீட்டில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் சுமார் ஒரு மணிநேரம் வரையில் மூடிய அறைக்குள் இடம்பெற்றுள்ளதாக அந்த தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான தீர்ப்பை நேற்று முன்தினம் உயர் நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

முன்னதாக குறித்த மூவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பத்து நிமிடங்களே இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அந்த பேச்சுவார்த்தை ஒரு மணிநேரம் வரையில் இம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமூகமாக இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் பின்னரே ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கு மைத்திரிபால சிறிசேன இணங்கியதாக தெவிக்கப்படுகின்றது.

இதனிடையே, ரணில் மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியேருக்கு இடையில் நேற்று இரவு தொலைபேசி ஊடாக மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்ததாகவும் அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers

loading...