எதிர்கட்சி தலைவர் மகிந்த? வலியுறுத்தும் முக்கியஸ்தர்கள்

Report Print Jeslin Jeslin in அரசியல்

எதிர்க்கட்சி தலைவர் பதவி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விசேட உரையின் பின்னர் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அனைவரும் மகிந்த ராஜபக்சவை எதிர்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers