மகிந்த ராஜபக்சவிற்கு புளித்துப் போன பழம்! ஆபத்தை ஏற்படுத்தும் இனவாதம்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

தமிழ் தேசிய கூட்டமைப்பை தனது பக்கம் இழுக்க முயன்ற மகிந்த ராஜபக்ச தனது இந்தப் பழம் புளிக்கும் கதையை சொல்கின்றார் என மனித உரிமை செயற்பட்டாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியை இராஜினாமா செய்து கொண்ட மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

சிங்கள பௌத்த இனவாதத்தை மகிந்த ராஜபக்ஷ கையிலெடுக்கின்றார். மகிந்த ராஜபக்ச தனது பதவி விலகல் குறித்து தெளிவுபடுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் காணப்படும் கருத்துக்கள் அவர் தீவிர சிங்கள பௌத்த பிரச்சாரத்திற்கு தயாராவதை வெளிப்படுத்தியுள்ளது.

தமிழ்தேசிய கூட்டமைப்பை தனது பக்கம் இழுக்க முயன்ற மகிந்த ராஜபக்ச தனது இந்த பழம் புளிக்கும் கதையை சொல்கின்றார்.

மகிந்த ராஜபக்சவின் இந்த அறிக்கையிலுள்ள ஆபத்து என்னவென்றால் இது தமிழ் எதிர்ப்பு இனவாதத்தை கொண்டிருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers