மஹிந்தவிற்கு ஆலோசனை வழங்கிய மங்கள!

Report Print Kamel Kamel in அரசியல்

இனவாத கொள்கைகளுக்கு இனி வரும் காலங்களில் இடமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு, முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவுரை வழங்கியுள்ளார்.

டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் மஹிந்தவிற்கு இந்த ஆலோசனையை மங்கள வழங்கியுள்ளார்.

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முயற்சிகளில் மஹிந்த ராஜபக்ச தொடர் தோல்விகளை சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சட்ட ரீதியாக உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு மஹிந்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

மீளவும் கடும் போக்குடைய தேசியவாத பிரச்சாரங்களை மஹிந்த முன்னெடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, இனி வரும் காலங்களில் குரோத உணர்வைத் தூண்டும் வகையிலான இனவாத அடிப்படையிலான அரசியலுக்கு இலங்கையில் இடமிருக்காது என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...