மகிந்தவின் கை நழுவிப் போன ஹீரோ பட்டம்!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

போரில் வெற்றி கொண்ட மகிந்த ராஜபக்ச இன நல்லிணகத்தை ஏற்படுத்தாமல் போனதன் விளைவே நாட்டின் ஹீரோவாக முடியவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்பினையடுத்து இன்றைய தினம் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை துறந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

பதவியிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படாமல் தானாகவே பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ஷ விலகியதை நான் வரவேற்கிறேன்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச, யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த போதும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும், சமானத்தையும் ஏற்படுத்த தவறியமையாலேயே அவரால் போரை வெற்றிக்கொண்ட உண்மையான ஹீரோவாக முடியாமல் போனது.

இனியாவது தவறான பாதையில் தன்னை வழிநடத்திய முரட்டுத்தனமான ஆலோசகர்களை மாற்றுவார் என எதிர்பார்க்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers