மைத்திரியால் இனி ஹிட்லராக முடியாது- சொல் பேச்சு கேட்காத மகிந்த

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனி ஒருபோதும் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஹிட்லரைப் போன்று செயற்பட முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம எடுத்துரைத்துள்ளார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பேசிய அவர்,

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிக்கவேண்டும். இதற்கு மஹிந்த ராஜபக்‌ஷவின் தரப்பினர் மாத்திரம் விதிவிலக்கல்ல.

நாங்கள் தற்போது எதிர்த்தரப்பினராகச் செயற்படுவதே சிறப்பானதாகும். இடைக்கால அரசைப் பொறுப்பேற்று மகிந்த ராஜபக்‌ஷ தவறு இழைத்து விட்டார் என்பதைப் பலமுறை எடுத்துரைத்தும், சில பதவி மோகம் கொண்டவர்களினால் எமது கருத்து மதிப்பிழக்கப்பட்டது.

இனியாவது மகிந்த ராஜபக்ச அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனி ஒருபோதும் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஹிட்லரைப் போன்று செயற்பட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.