ரணில் பதவியேற்கிறார்! மகிந்த தங்காலை பறக்கிறார்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ரணில் விக்ரமசிங்க நாளை காலை 10 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்கிறார் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது அரசியலமைப்புக்கு முரணானது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, இன்றைய தினம் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்து கொண்டார்.

இதனையடுத்து நாளை காலை ரணில் விக்ரமசிங்க பதவியேற்கிறார். இன்றைய தினம் பதவியை துறந்த மகிந்த, தனது கட்சி ஆதரவாளர்களைச் சந்தித்து, பேசியதுடன், அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பிலும் ஆராய்ந்தார் என அவரின் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மகிந்த ராஜபக்ச தவறானவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு தவறான முடிவுகளை இனியாவது எடுக்கக்கூடாது என்றும் அவரிடம் கட்சி ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளை காலை ரணில் விக்ரமசிங்க மைத்திரி முன்னிலையில் பதவியேற்கும் போது மகிந்த ராஜபக்ச தங்காலைக்கு பயணமாகிறார். தனது கட்சி ஆதரவாளர்களைச் சந்தித்து கலந்துரையாடுவதற்காக அவர் அங்கு செல்கின்றார் என்கின்றன தகவல்கள்.

இதேவேளை, நாளை மறுநாள் ரணில் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...