தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் காலத்தில் முதலிடத்தில் இருந்த கல்வி!

Report Print Arivakam in அரசியல்

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனுடைய காலத்தில் எம் இனத்தினுடைய கல்வி சிறப்புற்று இருந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி - உருத்திரபுரம் எள்ளுக்காடு முன்பள்ளியின் பாடசாலை மாணவர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த மண் தியாகங்களினால் நிமிர்ந்து நிற்கிறது, தமிழீழ தேசியத் தலைவர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த முன் பள்ளியினுடைய கட்டடமானது அவர்கள் பெயர் சொல்லி நிற்கிறது எமது சிறார்களின் கல்விக்காக இனத்தினுடைய கல்விக்காக எவ்வாறு செயற்பட்டிருக்கிறார்கள் என்பதை இந்த கட்டடம் பறைசாற்றி நிற்கிறது.

தியாகங்கள் நிறைந்த இந்த மண்ணிலே எங்கிருந்தோ வந்து சுயலாப அரசியல் தேடுகின்ற இடமாக மாற்றுவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள் தியாகங்கள் நிறைந்த இந்த மண் ஒருபோதும் இடமளிக்காது.

தங்கள் எதிர்கால வாழ்விற்காக வருகின்ற கல்வியாண்டில் பாடசாலை செல்ல உள்ள இந்த சிறார்களின் கல்வி சிறப்பாக இருக்க நாம் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.

குறித்த நிகழ்வானது கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராம அலுவலர் கமக்கார அமைப்புகளின் தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரிய பரந்தன் வட்டார அமைப்பாளர் யதீஸ்வரன் ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர் வைத்தீஸ்வரன் முன்பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.