சுதந்திரக்கட்சிக்குள் தனியான அமைப்பு - நல்லாட்சிக்கு ஆதரவாக செயற்பட தீர்மானம்

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மகிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, விஜித் விஜயமுனி சொய்சா, லசந்த அழகியவண்ண,பைசர் முஸ்தபா, சாரதி துஷ்மந்த மித்ரபால, இந்திக பண்டாரநாயக்க, லக்ஷ்மன் செனவிரட்ன, காதர் மஸ்தான், ஸ்ரீயானி விஜேவிக்ரம ஆகியோர் சுதந்திரக்கட்சிக்குள் ஒரு அமைப்பான செயற்பட தீர்மானித்துள்ளனர்.

ஜனவரி 8 மக்களுக்கு வழங்கிய நல்லாட்சி வாக்குறுதியை யதார்த்தமான மாற்றும் நோக்கில் “ ஜனவரி 8 நண்பர்கள்” என்ற பெயரில் இவர்கள் செயற்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க செயற்படுவார். இது சம்பந்தமான கூட்டம் மகிந்த அமரவீரவின் வீட்டில் நேற்று இடம்பெற்றுள்ளது.

ஜனவரி 8 நல்லாட்சி வாக்குறுதியை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்குவது, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொள்கை மற்றும் நோக்கங்களுக்கு இணங்க செயற்படுவது என இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பொது முன்னணியை ஏற்படுத்தும் முயற்சிக்கு இந்த அணியினர் ஆதரவளிக்க மாட்டார்கள் எனவும் நம்பதகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers