புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கும்!

Report Print Vethu Vethu in அரசியல்

இலங்கையின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

பலத்த சர்சைகளுக்கு மத்தியில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

இந்த பதவியேற்பு நிகழ்வை முக்கியமானதொரு மைல் கல்லாக கருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு புதிய பிரதமர் இன்று உரையாற்றுவார். அதனைத் தொடர்ந்து புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நளின் பண்டார கருத்து வெளியிட்டார்.

Latest Offers